மாதம் 40000 ரூபாய் சம்பளம்… வங்கியில் வேலை… இன்னும் மூன்று நாட்களே உள்ளது… மிஸ் பண்ணாதீங்க… 

Photo of author

By Sakthi

 

மாதம் 40000 ரூபாய் சம்பளம்… வங்கியில் வேலை… இன்னும் மூன்று நாட்களே உள்ளது… மிஸ் பண்ணாதீங்க…

 

வங்கியில் மாதம் 40000 ரூபாய் சம்பளத்தில் புரொபேஷனரி பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் மறக்காமல் விண்ணபிக்க அறிவுறுத்தப்படுகின்றது.

 

அந்த அறிவிப்பின் படி இந்திய பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள புரொபேஷனரி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

பேங்க் ஆப் பரோடா, இந்தியன் வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட இந்திய பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள 3049 புரொபேஷனரி பணிக்கும், மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் பணிக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

 

பணி பற்றிய விபரங்கள்…

 

பணியின் பெயர் : புரொபேஷனரி அதிகாரி, மேனேஜ்மென்ட் பயிற்சியாளர்

 

காலிப் பணியிடங்கள்: 3049

 

கல்வித் தகுதி: எதாவது ஒரு துறையில் இளநிலை பட்டம்

 

தேர்வு செய்யும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு

 

மாதச்சம்பளம் : 41,960

 

வயது வரம்பு : 21 வயது முதல் 30க்குள் இருக்க வேண்டும்(1.08.2023)

 

விண்ணப் கட்டணம் : இந்த பணிக்கு 850 ரூபாய் செலுத்தி ஆன்லன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவை சேர்ந்தவர்கள் 175 ரூபாய் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் https://www.ibps.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.08.2023

 

முதல் நிலை தேர்வு நடைபெறும் இடங்கள் : சென்னை, கோவை, மதுரை, இராமநாதபுரம், பெரம்பலூர், கரூர், கடலூர், ஈரோடு, வேலூர், விருதுநகர், சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, திருச்சி