சம்பள உயர்வு.. இந்த அரசு ஊழியர்களுக்கு ரூ 6000 எப்படி கட்டுப்படியாகும்!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Photo of author

By Rupa

 

சம்பள உயர்வு.. இந்த அரசு ஊழியர்களுக்கு ரூ 6000 எப்படி கட்டுப்படியாகும்!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத இதர பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 6000 சம்பளத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இது போதுமானதாக இருக்காது எனக் கூறி மதுரை சேர்ந்த ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.

இன்றைய காலகட்டத்தில் ஒரு நாளுக்கு 200 என்ற வீதம் மாதம் ரூ 6000 சம்பளம் என நிர்ணயித்தால் போதுமானதாக இருக்குமா, என நீதிபதிகள் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத இதர பணிகளை செய்யும் ஊழியர்களுக்கு எப்படி இந்த சம்பளத்தை நிர்ணயித்து கையெழுத்து போட்டிருக்க முடியும்.

இதனை சிறிதளவு கூட அரசுத்துறை செயலாளர் யோசிக்க வேண்டாமா என்று கேட்டுள்ளனர். மேலும் கண்ணை மூடிக்கொண்டு தான் அரசாணையில் கையெழுத்து விடுவதா? என்று அடுத்தடுத்து கேள்விகளை முன்வைத்துள்ளனர். மேற்கொண்டு இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க கோரி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாது பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்த அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.