நாளை முதல் இவர்களுக்கு அமலாகும் சம்பள உயர்வு! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
கடந்த செப்டம்பர் மாதம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கூடுதலாக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. கூடுதலகா ஆசிரியர்கள் நியமிப்பது மட்டுமின்றி புதிய ஊதிய விகிதங்கள் வழங்கவும் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலமகா அரசுக்கு கூடுதலாக 280 கோடி ரூபாய் வரை நிதி சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஜிசி ஊதிய விகிதத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு புதிய ஊதிய தொகை வழங்கப்படும்.இந்தியாவில் மத்திய அரசானது அண்மையில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியிட்டு வருகின்றது.
இந்நிலையில் பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படும்.மேலும் பகுதி நேர ஆசிரியர்கள்,ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவருக்கும் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.