நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர்

0
179

நோக்கியாவை கைப்பற்றிய பின்லாந்து நிறுவனம்: மீண்டும் தொழில் நகரமாகும் ஸ்ரீபெரும்புதூர்

கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்ட நிலையில் இந்த நிறுவனத்தை பின்லாந்து நாட்டின் சால்காம்ப் என்ற நிறுவனம் நோக்கியா வளாகத்தை கையகப்படுத்தி உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் முதல் மீண்டும் நோக்கியா நிறுவனம் அதே இடத்தில் தொடங்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

ரூ.350 கோடி சால்காம்ப் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் மேலும் ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளதாகவும், இதனால் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள சுமார் 10 ஆயிரம் பேர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொழில் மந்தமாக இருந்த நிலையில் இந்த ஆலை திறந்துவிட்டால் மீண்டும் தொழில் நகரமாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது

2019-ம் ஆண்டு தமிழக அரசு நடத்திய தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் சால்காம்ப் நிறுவனம் கலந்து கொண்டு தமிழகத்தில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்தது என்பது தெரிந்ததே. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் தற்போது நோக்கியா நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே ஆப்பிள் போன் நிறுவனம் தனது ஐபோன் எக்ஸ்.ஆர். போனை இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்ய உள்ள திட்டமிட்டுள்ளதால் செல்போன் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முக்கியத்தும் பெரும் நாடாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Previous articleஉள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா? தலித்துகளுக்கு இடஒதுக்கீடு கேட்டு செ.கு.தமிழரசன் வழக்கு
Next article10 ஆண்டுகளில் தமிழ்நாட்டை தாக்கிய 54 புயல்களில் 359 பேர் பலி