களைகட்டும் ஆடித்திருவிழா …..மழவர் தேசம் கொண்டாடும் மகத்தான திருவிழா…. இன்று ஆத்தூரிலும்!!!!
சேலம்:ஆடி மாதம் என்றாலே விழாக்கோலம் கொள்ளும் சேலம் மாவட்டத்தில் சேலம் பெரிய மாரியம்மன் திருவிழா முடிந்ததை அடுத்து மழவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாரியம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குத் தான் கோலாகலம் என்றால் பெரும்பாலும் வட தமிழகத்தில் கொண்டடப்படும் விழாக்கள் ஆடி மாதத்தில் தான்.
இந்நிலையில் இன்று சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பகுதியில் ஓலப்பாடி கிராமத்தில் மழை வேண்டி ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தும், விரதம் இருந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பிறகு சுவாமி உற்சவம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்து கொண்டு உள்ளது.
இதே போன்று பல்வேறு ஊர்களில் மக்கள் மாரியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடந்தி வருகின்றனர்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.