சேலம்: “மண்கொத்தியே வருக”வெளிநாட்டுப் பறவைகளை வரவேற்கும் பறவை ஆர்வலர்கள்!

0
132

வெளிநாட்டு பறவைகளை வரவேற்பதற்காக சேலம் மாவட்ட பறவை ஆர்வலர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

அக்டோபர் முதல் அடுத்த மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் இரை தேடுவதற்காக இந்தியாவிற்கு வரும். இதனை வலசை காலம் என்பார்கள். அதனால் “மண்கொத்தியே வருக” என்ற சுவரொட்டிகளை சேலம் மாவட்ட இளம் பறவை ஆர்வலர்கள் ஒட்டியுள்ளனர்.

மண்கொத்தி, சாம்பல் வாலாட்டி உள்ளிட்ட பறவைகள் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து வருகின்றன.

அவ்வாறு வலசை வரும் பறவைகளை இடையூறு செய்யாமல் இருப்பதற்காக இந்த மாதிரியான சுவரொட்டிகள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையாக அமையும் என பறவை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இரை தேட வரும் பறவைகள் இங்கு இனப்பெருக்கம் செய்யாது. நமது நிலத்தில் உள்ள விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சி புழுக்களை உண்டு பின்னர் மார்ச் மாதத்திற்கு தங்களுடைய சொந்த இருப்பிடத்திற்கே திரும்பி விடும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous articleஉயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தொடரும் மணல் கொள்ளை !!
Next articleகூகுள் பே நிறுவனம் குறித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு :! கூகுள் பே நிறுவனம் இன்று விளக்கம் !!