சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம்- அன்புமணி ராமதாஸ் அறிக்கை

Photo of author

By Vijay

பாமக மாநில இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள் சென்னை சேலம் 8 வழிச்சாலை குறித்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

சென்னை சேலம் 8 வழிச்சாலை குறித்து, தமிழக அரசின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 8 வழி பசுமைச்சாலை அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துவது குறித்து, தர்மபுரி மாவட்ட நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அளித்துள்ள விளக்கம் விவசாயிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

எனவே, அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிப்பதன் மூலமே மக்களின் அச்சத்தைப் போக்க முடியும் என்று அன்புமணி ராமதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.