சேலம்-கோவை தினசரி ரயில் சேவை 18 நாட்களுக்கு ரத்து:! பயணிகளே மாற்று ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள்!

Photo of author

By Pavithra

சேலம்-கோவை தினசரி ரயில் சேவை 18 நாட்களுக்கு ரத்து:! பயணிகளே மாற்று ஏற்பாடு செய்துக்கொள்ளுங்கள்!

சேலம்-கோவை மற்றும் கோவை-சேலம் தினசரி பேசஞ்சர் ரயில் சேவை 18 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் சார்பாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது கோவை மற்றும் திருப்பூர் ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருவதன் காரணமாக,கோவை-சேலம் மற்றும் சேலம்-கோவை ஆகிய பயணிகளின் ரயில் சேவை ஞாயிறை தவிர்த்து மற்ற தினசரி ரயில் சேவையை 18 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே தீபாவளி பண்டிகைக்கு ரயிலின் மூலம் வரும் பயணிகள் மாற்றி ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.