சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!!

சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!!

சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சித்தர் கோவில் வழியாக இளம்பிள்ளைக்கு அரசு பேருந்துந்தானது இயங்கி வருகிறது. இன்று காலை 10 மணியளவில் வேடுகத்தாம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள முருகன் பார்மஸி அருகிலிருந்த பள்ளத்தில் அரசு பேருந்தானது சிக்கிக் கொண்டது.இந்த பள்ளமானது குடிநீர் பாதைக்காக வெட்டப்பட்டது.

சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!!
#image_title

மேற்கொண்டு சில நாட்களாகவே இதில் கசிவு ஏற்பட்டுள்ளது.இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் இன்று எதிர்பாரா விதமாக இந்த அரசு பேருந்தானது மாட்டிக்கொண்டது.இதில் பயணிகள் மற்றும் ஓட்டுநர் யாருக்கும் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவில்லை. இதனையடுத்து பயணிகள் அனைவரும் இறங்கி வேறொரு பேருந்தில் சென்றனர்.

சேலம் மாவட்டம்: பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து!! பயணிகள் கடும் அவதி!!
#image_title

பள்ளத்தில் இருந்த பேருந்தை மேலே எடுக்க முடியாமல் பல மணி நேரமாக அதே இடத்தில் இருந்தது.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பானது ஏற்பட்டது.இதையடுத்து இழுவை இயந்திரம் வரவழைக்கப்பட்டு பல மணி நேரத்திற்கு பிறகு பேருந்தை பள்ளத்திலிருந்தி மீட்டெடுத்தனர்.இவ்வாறு பேருந்தானது பள்ளத்தில் சிக்கிக் கொண்டதால் அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.