சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

0
81
Salem District has a new plan to go into effect on August 1st! Motorists shocked!
Salem District has a new plan to go into effect on August 1st! Motorists shocked!

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அமலுக்கு வரும் புதிய திட்டம்! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 தற்போது சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் சாலை பராமரிப்பு பணி நடந்து வருவதால்  சில போக்குவரத்து விதிகள் போடப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  மேலும் குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை செய்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

ஆனால்  சேலம் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் ஏராளமான வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். மேலும் இந்தநிலையில், சேலம் மாநகரில் வருகிற 1-ந் தேதி  முதல் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. மேலும் இதுகுறித்து மாநகர போலீஸ் சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.

அந்த செய்தி குறிப்பில் வருகிற 1-ந் தேதி முதல் சேலம் மாநகரத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. மேலும்  மோட்டார் சைக்கிள்கள் போன்ற இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த செய்தி குறிப்பில் கூறியுள்ளனர். மேலும்  வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து விபத்துகளை தடுக்க மாநகர போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

author avatar
Parthipan K