தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் தான் முதலிடம்! பாராட்டுகள் குவிகின்றது!
கொரோனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் மக்கள் வீட்டிற்குள்ளே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்நிலையில் உலக நாடுகளின் மருந்து ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் போராடி மருந்துகளை கண்டுபிடித்தனர். மேலும் கோவாச்சின் , கோவிஷீல்ட் போன்ற பெயர்களுடன் தடுப்பூசிகள் வெளிவந்தது. முதலில் மக்கள் அனைவரும் அதனை செலுத்தி கொள்வதற்கு தயங்கினார்கள்.
மேலும் அரசின் விழிப்புணர்வு காரணத்தால் மக்கள் ஆர்வத்துடன் முதல் கட்ட தடுப்பூசி மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை செலுத்தி கொண்டார்கள். அதனையடுத்து தற்போது பூஸ்டர் தடுப்பூசியின் போடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் அறிவிப்பின்படி மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. ஒரு ஊர்களிலும் ஒவ்வொரு நாளில் என்று குறிப்பிட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டு அந்த தேதிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 12 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 95% பேருக்கு முதல் தகவல் தடுப்பூசியும் 81% பேருக்கு, இரண்டாம் தவணை தடுப்பூசியின் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் சேலம் மாவட்டத்தில் 95 ஆயிரம் 401 டோஸ் தடுப்பூசியால் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனோ தடுப்பூசி செலுத்துவதில் தமிழகத்திலேயே சேலம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சேலம் மாவட்டத்தில் அனைவரும் தகுந்த தேதிகளில் அவரவர்களின் வயதிற்கு ஏற்றவாறு தடுப்பூசிகள் செலுத்தி கொண்டார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.