ஏண்டா? போனா போகுதுன்னு வளர்த்தா உனக்கு சொத்து கேக்குதா? வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த கதி!

0
297

திருநங்கை ஆசை ஆசையாக வளர்த்த வளர்ப்பு மகனின் 30 லட்ச சொத்தை அபகரிப்பதற்காக வளர்ப்பு மகனையே துன்புறுத்திய திருநங்கையின் கணவர் செய்த செயல் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் ஸ்டேட் பேங் காலனி அருகே உள்ள கார்காண தெருவை சேர்ந்தவர் கண்ணகி. இவர் ஒரு திருநங்கை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் லைன்மேட்டை பகுதியை சேர்ந்த அப்துல் முபாரக் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கண்ணகி ராகுல் என்ற சிறுவனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவன் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

கண்ணகிக்கு 30 லட்சம் சொத்து மதிப்பு உள்ளது என கூறப்படுகிறது. இதை தன் மீது எழுதி வைக்க சொல்லி அப்துல் முபாரக் அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கண்ணகியையும், ராகுலையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வந்துள்ளர்.

இந்நிலையில் அப்துல் முபாரக் கடந்த சில நாட்களுக்கு முன் ராகுலை தாக்கி அவனுடைய கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வளர்ப்பு மகனாகிய உனக்கு சொத்து வேணுமா என சொல்லி மிரட்டி கண்ணகியிடம் சொத்தை எழுதி வைக்குமாறு கேட்டுள்ளான். இதுதொடர்பான வீடியோ ஆதாரத்துடன் திருநங்கை கண்ணகி தனது கணவர் மீது பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கண்ணகி கொடுத்த புகாரின் பெயரில் அப்துல் முபாரக் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

 

Previous articleதமிழகத்தில் குறைந்தது வரும் கொரோனா பாதிப்பு! அக். 18 கொரோனா பாதிப்பு நிலவரம்!!
Next articleஇந்த ராசிக்கு இன்று மருத்துவ செலவு ஏற்படும்! இன்றைய ராசி பலன் 19-10-2020 Today Rasi Palan 19-10-2020