சேலம் அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவியர் இஸ்ரோ சென்று சாதனை! குவியும் பாராட்டு!
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி உள்ள அரசு மாதிரி பள்ளி மாணவ மாணவிகள் சுற்றுப் பயணமாக பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்துச் செல்வதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த கல்வி சுற்றுலாப் பயணத்திற்கு 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அழைத்துச் செல்வதாக கூறியிருந்தனர்.
இதனையடுத்து மாணவர்களை வழி அனுப்பி வைக்கும் விழாவானது ஆசிரியர் மாதேஷ் தலைமையில் 20-ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற்றது. அதில் பேசிய கல்வி மாவட்ட அலுவலர் பாலசுப்ரமணியம் இந்த கல்வி சுற்றுலா பயணம்மானது மாணவர்களின் தனி திறமையை மேம்படுத்த உதவும் எனவும் கூறினார்.
இந்த கல்வி சுற்றுலாப் பயணத்திற்கு 23 மாணவ மாணவியர்கள் 3 நாட்கள் சென்று வந்துள்ளனர். பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மையத்திற்கு சென்று அங்குள்ள விஞ்ஞானிகளிடம் விண்வெளி ராக்கெட் ஏவுவது தொடர்பான விஷயங்களும் ராக்கெட் உதிரி பாகங்கள் பொருத்தும் செயல்முறை போன்றவற்றை கேட்டறிந்தனர்.
இவர்கள் கல்விச் சுற்றுலா பயணத்தில் இருந்து திரும்பியவுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதில் முதன்மை கல்வி அலுவலர் முருகன் மற்றும் தலைமை ஆசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.