தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சி சேலம் தான்! 25 லட்சம் பணம் மற்றும் விருதை கொடுத்து கௌரவிக்கும் முதல்வர்!
இந்த வருடம் 75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி அனைத்து வீட்டிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. மூன்று நாட்கள் இந்த தேசியக்கொடி ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் தங்களது வீட்டில் இந்த மூன்று நாட்கள் கட்டாயம் கொடியை ஏற்ற வேண்டும் என்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் அறிவுறுத்தப்பட்டது. பள்ளி நிர்வாகம் கூறியது போல் மாணவர்கள் கொடியை ஏற்றினால் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த சுதந்திர தின விழாவையொட்டி வருடம் தோறும் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும். அதுமட்டுமின்றி சிறப்பாக பணியாற்றிவர்களுக்கும் அவர்களை கௌரவிக்கும் விதமாக விருது வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்ய ஆய்வு செய்தனர். இதில் சேலம் மாவட்டம் நான்கு பிரிவுகளில் முதன்மை வகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் அனைத்தும் சிறப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை வைத்து பார்க்கும் பொழுது மற்ற மாநகராட்சியை விட சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வாகியுள்ளது. சேலத்தை கௌரவிக்கும் விதமாக வரும் 15ஆம் தேதி சென்னையில் நடக்கும் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்க உள்ளார். இந்த விருதை சேலம் மேயர் ராமச்சந்திரன் மற்றும் கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆகியோர் வாங்க உள்ளனர்.