சேலம் மாவட்ட மாணவிகளின் கோரிக்கையை ஏற்ற முதன்மை கல்வி அலுவலகம்! நெகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்!

Photo of author

By Sakthi

சேலம் மாவட்ட மாணவிகளின் கோரிக்கையை ஏற்ற முதன்மை கல்வி அலுவலகம்! நெகிழ்ச்சியில் மாணவச் செல்வங்கள்!

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அடுத்து இருக்கின்ற கரிக்காபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி தறி தொழிலாளி இவருடைய மகள் கஸ்தூரி ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் எம் பி சி பிரிவில் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். இவர் நீட் தேர்வில் 252 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார் என்று சொல்லப்படுகிறது.

இதற்கிடையே இவருடைய பெயர் பொது தரவரிசை பட்டியலில் இடம் பெற்று இருந்தது, ஆகவே மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உரிய 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தன் பெயரையும் சேர்ப்பதற்கான பரிந்துரையை வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவை வழங்கினார் அந்த மாணவி கஸ்தூரி.

அதன் அடிப்படையில், அவருடைய மனுவை ஏற்றுக்கொண்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ப்பதற்கு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. அதே போல சேலம் மாவட்டத்தில் 9 மாணவிகள் தங்களுடைய பெயரை மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை வேண்டும் என்று தெரிவித்து மனு வழங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

அந்த மனுக்களையும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ததாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறியிருக்கிறார்.