நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெறுமா? மத்திய அரசின் முயற்சி!

0
61

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது, ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், மார்ச் மாதம் 14ம் தேதி முதல் மாதம் 8ஆம் தேதி வரையில் இரண்டாவது கட்டமாகவும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.

இதற்கு நடுவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் போதெல்லாம் வழக்கமாக நடைபெறும் அலுவல் ஆன அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எதிர்வரும் 30ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கூட்டம் நடைபெற இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் இதில் பங்கேற்க இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மக்களவை சபாநாயகர் அழைப்பு விடுத்திருக்கிறார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது இந்த கூட்டத்தின் நோக்கமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

2 சபைகளிலும் விவாதிக்க வேண்டிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை அரசுத்தரப்பு கேட்டு அதற்கு ஏற்றவாறு அலுவல்கள் திட்டமிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.