Salem: சேலம் மாவட்டத்தில் தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
மக்கள் அதிகமாக இருக்கும் பகுதிகள், இரயில்வே நிலையங்கள் பெரும்பாலான இது போன்ற இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதுண்டு. அந்தவகையில் நேற்று வெளிநாடு பயணம் சென்ற முதல்வர் விமானத்திற்கும் வெடிகுண்டி மிரட்டல் விட்டதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சேலம் மாவட்டத்தில் ஒரே நிறுவனத்தை சார்ந்த பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஏற்காடு அடிவாரம், குருவம்பட்டி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்தடுத்த பள்ளிகள் ஈரோடு, திருச்சி மாவட்டத்திலும் செயல்பட்டு வருவதுண்டு. இன்று ஒரே நாளில் இந்த மூன்று பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டலானது மின்னஞ்சல் மூலம் வந்துள்ளது.மேற்கொண்டு பள்ளி நிர்வாகிகள் காவல் துறைக்கு அழைப்பு விடுத்து புகாரளித்துள்ளனர்.
போலீசார் பள்ளி வளாகம் எனத் தொடங்கி சுற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர்.அத்தோடு யார் இவ்வாறான மின்னஞ்சலை அனுப்பியுள்ளனர் என்பது குறித்தும் விசாரணை செய்யப்படுகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.