டிஎன்பிஎல்! 16 ரன்கள் வித்தியாசத்தில் சேலத்திடம் விழுந்தது திருப்பூர் அணி!

Photo of author

By Sakthi

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் ஏழாவது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திருப்பூர் தமிழன், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் 40 ரன்களை சேர்த்தார். அபிஷேக் 38 ரன்கள் சேர்த்தார்.

இதனைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன் அணி களம் கண்டது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட் ஆனார்கள். கேப்டன் பிரான்சிஸ் அரைசதம் அடித்து 58 ரன்களுக்கு வெளியேறினார்.

இதில் திருப்பூர் அணி 8 விக்கெட்டுக்கு 148 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் சேலம் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. சேலம் அணி சார்பாக பெரியசாமி முருகன், அஸ்வின் பிரனேஷ், தலா 2 விக்கெட் வீழ்த்தினர்