சுழற்பந்து வீச்சில் இடம்பெறப் போவது யார்? இந்திய அணியில் நீடிக்கும் குழப்பம்!

0
85

இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நேற்றைய தினம் ஆரம்பமானது. இந்திய அணி ஏற்கனவே ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் டி20 தொடர் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.

ஒருநாள் போட்டி முழுவதுமே பிரித்விஷாவிற்கு தொடக்க ஆட்டக்காரராக வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, இளம் வீரர்கள் படிக்கல், ருத்ராஜ் உள்ளிட்ட இருவருமே வெளியில் அமர்ந்து இருக்கிறார்கள். ஆகவே முதல் டி20 போட்டியில் இவர்களில் யாரேனும் ஒருவர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதிலும் குறிப்பாக படிக்கல் மீது பயிற்சியாளர் திராவிட் மிக நம்பிக்கை வைத்திருப்பதால் அவர் தான் களமிறக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது.

ஒருநாள் போட்டியில் அரைசதம் கண்டு அசத்திய இஷான் கிஷன் இரண்டாவது விக்கெட்டுக்கு களம் இறக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவ் நல்ல பார்மில் இருப்பதால் டி20 தொடரில் அதற்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரையில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருணால் பாண்டியா உள்ளிட்டோர் களம் இறங்குவார்கள் என்று சொல்லப்படுகிறதே ஹர்திக் பாண்டியா மீண்டும் பார்மிக்கு திரும்பி வருவதால் டி20 தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று சொல்லப்படுகிறது.

பவுலிங்கை பொறுத்தவரையில் துணை கேப்டன் புவனேஸ்வர் குமார் தீபக் சாகர் நவ்தீப் சைனி உள்ளிட்டோர் இருக்கிறார்கள் சுழற்பந்து வீச்சில் குழப்பம் நீடித்து வருவதாக சொல்லப்படுகிறது இலங்கை தொடரில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இதுவரையில் வாய்ப்பு வழங்கப் படாமல் இருக்கிறார். ஆகவே அவர் முதல் டி20 போட்டியில் நிச்சயமாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக இரண்டாவது சுழற்பந்து வீச்சாளராக சாகல் களமிறங்குவாரா அல்லது ராகுல் சாகர் களமிறக்கப்படுவாரா என்ற குழப்பம் நீடித்து வருகின்றது.