சேலம்: மண்ணுக்குள் புதைந்திருந்த  வித்தகர் விநாயகர்!! 1500 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் கண்டெடுப்பு!!

Photo of author

By Rupa

சேலம் மாவட்டம் அரியானூர் செல்லும் வழியில் உத்தமசோழபுரம் உள்ளது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரபுரநாதர் கோவில் இடம்பெற்றுள்ளது. இதில் சிவபெருமான் சாய்ந்த மக்களுக்கு கோளத்தில் காட்சியளிக்கிறார்.

குறிப்பாக இந்த கோவிலின் புராணக் கதைகளில் அவ்வையார் தான் மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறார். பாரி வள்ளலின் மகள்களுக்காக மூவேந்தர்களின் சம்மதம் கிடைக்க சிவபெருமான் நேரடி ஆசி கொடுத்ததாக புராண கதைகள் கூறுகின்றன.

அது மட்டுமின்றி சேர சோழர் பாண்டியர் என மும் மன்னர்களும் வணங்கும் தளமாகவும் இருந்துள்ளது. இப்படி பிரசித்தி பெற்ற தளம் அருகே 1500 ஆண்டு பழமை வாய்ந்த வித்தகர் விநாயகர் கோவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு அவ்வை முக்தி அடைந்த இடமும் இந்த திருத்தலம் தான் என கூறுகின்றனர்.

மேற்கொண்டு புராண நூல்களில் அவ்வை “விநாயகர் அகவல்” எழுதிய இடமும் இந்த கோவில் தான். இந்த கோவிலானது உத்தமசோழபுரம் திருமணிமுத்தார் அருகே குப்பை மேட்டுடன் தெரியாமல் இருந்துள்ளது. அங்கிருந்த மக்கள் தகவல் கொடுத்ததன் பெயரில் பசுமை தமிழகம் குழுவினர் அதனை தற்பொழுது மீட்டெடுத்துள்ளனர்.

இவ்வாறு வரலாறு சார்ந்த கோவில்களை அரசாங்கம் மீட்டெடுத்து மேம்பாட்டு பணிகள் செய்து காக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.