ஏ ஆர் முருகதாஸிற்காக உயிரைக் கொடுக்கத் துணிந்த சல்மான்கான்!!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் படம் தான் சிகந்தர். இதில் ஹீரோவாக நடிகர் சல்மான் கான் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் சிகந்தர் படத்தினை மட்டும் தற்பொழுது இயக்கவில்லை அதற்கு இணையாக சிவகார்த்திகேயன் 23 என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் சல்மான் கானுக்கு கொலைமிரட்டல் விடப்பட்டதால், ஒட்டுமொத்த படக்குழுவினருமே பயந்து விட்டனர். அப்படி இருக்கும்போது, நடிகர் சல்மான் கானுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

எனினும், அவர் தன்னுடைய பாதுகாப்பு கருதி வீட்டிலேயே இருக்காமல், முருகதாஸ் இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி வரும் சிகந்தர் படத்திற்கு ஷூட்டிங் இருக்காங்க வந்துள்ளார். தனது உயிரையும் பொருட்படுத்தாமல் ஏ ஆர் முருகதாஸிற்காக இவர் செய்த இந்த காரியம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

ஏ ஆர் முருகதாஸ் கடைசியாக இயக்கிய படம் ரஜினிகாந்த் நடித்த தர்பார் ஆகும். இந்த படத்தை இயக்கிய பின் இந்த படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்கள் மற்றும் மோசமான வசூலை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் திரையுலகில் சிறிது காலங்களாகவே இல்லாமல் போய்விட்டார் என்றும் கூறலாம்.

அதற்குப் பின் தற்பொழுது தான் இந்த இரு படங்களையும் இவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சல்மான் கான் செய்துள்ள இந்த சம்பவம் அனைவருடைய மனதையும் நெகிழச் செய்வதாக உள்ளது.