Breaking News

சம்பளம் கொடுக்க சென்ற தயாரிப்பாளரை வெளியே போய்விடுங்கள் எனக் கூறிய சல்மான் கான்!

சம்பளம் கொடுக்க சென்ற தயாரிப்பாளரை வெளியே போய்விடுங்கள் எனக் கூறிய சல்மான் கான்!

நடிகர் சல்மான் கான் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகும் லூசிபர் திரைப்படத்தில் நடிக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் கதாநாயகனாக நடித்த லூசிஃபர் திரைப்படம் மெஹா ஹிட் ஆனது. மலையாள சினிமாவில் முதல் முதலாக 200 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக அமைந்தது லூசிஃபர்.

இதையடுத்து இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மோகன் லால் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் சல்மான் கான் நடிக்கிறார். மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில்தான் சல்மான் கான் நடிக்கிறார். தமிழில் பல வெற்றிப்படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் உருவாகி வருகிறது. படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா பணியாற்ற, கலை இயக்குனராக சுரேஷ் செல்வராஜன் பணியாற்றுகிறார். தமன் இசையமைக்கிறார். படத்தை பிரம்மாண்டமாக ஆர் பி சௌத்ரி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இந்த திரைப்படம் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் மும்பையில் இந்த படத்துக்காக நடந்த ஒரு ப்ரமோஷனில் பேசிய சல்மான் கான் “இந்த படத்துக்காக தயாரிப்பாளர்கள் எனக்கு சம்பளம் கொடுக்க வந்த போது வெளியே போய்விடுங்கள் (Get lost) என்று கூறினேன்” எனப் பேசியுள்ளார். இதன் மூலம் சம்பளமே வாங்காமல் இந்த படத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.

Leave a Comment