காதல் வாழ்க்கை கை விட்டாலும் திரை வாழ்க்கையை கை விடாத சமந்தா!! மீண்டு வருவாரா??

காதல் வாழ்க்கை கை விட்டாலும் திரை வாழ்க்கையை கை விடாத சமந்தா!! மீண்டு வருவாரா??

சமந்தா தற்பொழுது நடித்து கொண்டு இருக்கும் படம் குஷி. இந்த படம் தமிழ் ,தெலுங்கு என்ற இரண்டு மொழிகளிலும் வெளியாக தயாராகி கொண்டு இருக்கின்றது.

சமந்தா தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,இந்தி அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும்  நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இவர் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி  நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்த பல மாதங்களுக்கு பிறகு மீண்டு வந்தார்.

அவர் பதிக்க பட்டிருத்த அந்த ஓராண்டு கால இடைவெளியில் எந்த ஒரு புதிய படத்திலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தார்.அதன் பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து நடிக்க தொடங்கினார்.

உடல்நிலை முழுமையாக குணமடையாத காரணத்தால் தான் நடிப்பதாக ஒப்பந்தம் செய்து முன்பணம் வாங்கிய நிலையில் தற்பொழுது  அனைத்தையும் திருப்பி கொடுத்துள்ளார்.

மேலும் சில நாட்களாகவே கோவில்களுக்கு செல்வதும் இயற்கையுடன் ஒன்றி இருப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்.

தற்பொழுது சமூக வலைத்தளத்தில் சமந்தா ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில் மரணத்தில் இருந்து நம்மை எதுவும் காப்பாற்றாது.எனவே காதல் மூலமாவது வாழ்க்கையை காப்பற்றிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் ரசிகர்கள் சமந்தா தனது காதல் வாழ்க்கை நினைத்து வேதனை படுகிறார்  என்றும் அவர் உடல்நிலை மீண்டு வர வேண்டும் என்று பதிவிட்டுள்ளனர்.