நடிகை சமந்தா அவர்களின் வாழ்வு குறித்தும் அவரது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் குறித்தும் ரசிகர்கள் பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்புள்ளது. காதல் திருமணம், விவாகரத்து, மயோ சிட்டிஸ் நோய் அதனைத் தொடர்ந்து திரைப்படங்களில் தோல்வி போன்றவை அவரை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்த சமந்தா தெரிவித்திருப்பதாவது :-
பல நாட்களுக்கு சமந்தாவை மேடையில் பார்த்ததும் ரசிகர்கள் தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அந்த சந்தோஷத்தில் பலர் சமந்தாவை நோக்கி ஐ லவ் யூ என தெரிவித்தனர். சமந்தாவோ ஐ லவ் யூ டூ என எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் பதிலளித்தார். ஆனால் அதனை தொடர்ந்து ஒருவர் ஐ லவ் யூ மம்மி என தெரிவித்ததற்கும் கோபமோ முகத்தில் சுழிப்போ எதுவும் இல்லாமல் உடனடியாக சிரித்துக்கொண்டே ஐ லவ் யூ டூ மகனே என சமந்தா பதில் அளித்து இருப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
அப்பொழுது பேசிய சமந்தா கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றும் படங்களில் கிட்ட எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் கூட ரசிகர்கள் என் மீது இந்த அளவிற்கு அன்பு வைத்திருப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் அதற்கான காரணம் என்ன என்று தனக்கு தெரியவில்லை ஆனால் இந்த அன்பிற்கு நான் தகுதியானவளா என்றும் கூட எனக்கு தெரியவில்லை என்பது போல பேசி மேடையில் கண்கலங்கி இருக்கிறார்.
குறிப்பாக சமந்தா எப்பொழுதுமே தைரியமாக பெண்ணாக காட்சி கொடுக்க காரணம் அவரது வாழ்க்கை பயணம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களினுடைய தைரியத்தால் இயங்குகிறதாகும். சமந்தா அவர்களின் சமூக வலைதளத்தில் அவர் போட்டிருக்கக்கூடிய பதிவில் , ” இன்று இந்த நாளை சுயமரியாதையோடு வாழ பழகி கொள்கிறேன். எந்த நேரத்திலும் என்னை நானே பக்குவப்படுத்திக் கொள்கிறேன். அமைதிக்கொள் மனமே, அமைதிக்கொள் ” என தன்னுடைய பதிவில் தெரிவித்திருப்பதோடு முதலில் நாம் நம்மை நம்ப வேண்டும் என்றும் தைரியமாக இருக்க இதுவே மிகப்பெரிய காரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.