“சமந்தா”.. இதை நான் வெச்சுப்பேன் யாரும் கேள்வி கேட்கக்கூடாது.. அது என்னுடைய பர்சனல் – நாக சைதன்யா!!

Photo of author

By Rupa

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா அவர்கள் விவாகரத்து பெற்ற பின்னரும் முன்னாள் மனைவி சமந்தா அவர்களின் ஒரு புகைப்படத்தை மட்டும் நீக்காமல் இருப்பது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபல நடிகர்  நாக சைதன்யா அவர்களும் பிரபல நடிகை சமந்தா அவர்களும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு குடும்பத்தின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2021ம் ஆண்டு விவாகரத்து வாங்கி பிரிந்தனர்.
இதையடுத்து நடிகர் நாக சைதன்யா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னாள் மனைவி சமந்தா அவர்களின் புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்த அவர் சமந்தாவை அன்பாலோ செய்தார். இதையடுத்து நடிகர் நாக சைதன்யா அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை சமந்தாவுடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை மட்டும் நீக்காமல் வைத்துள்ளார்.
அதாவது ரேஸ் கார் ஒன்றில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் இறங்குவது போன்ற ஒரு புகைப்படத்தை நடக்காமல் இருக்கிறார். அந்த புகைப்படத்தில் “மிஸஸ் அன்ட் தி கேர்ல் பிரண்ட்” என்ற தலைப்பும் இட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் சமந்தாவுடன் விவாகரத்து வாங்கிவிட்டீர்கள். மேலும் நடிகை சோபிதாவுடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. இந்நிலையில் அந்த புகைப்படத்தை மட்டும் இன்னும் ஏன் டெலிட் செய்யாமல் உள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இந்த கேள்விக்கு நாக சைதன்யா ரசிகர்கள் தக்க பதில் கொடுத்துள்ளனர்.
நெட்டிசன்களின் இந்த கேள்விக்கு நாக சைதன்யா ரசிகர்கள் “ஒரு புகைப்படத்தை வைத்திருப்பதும் டெலிட் செய்வதும் அவரவருடைய விருப்பம் தான். இதில் மற்றவர்கள் தலையிடுவது அநாகரிகமான செயல்” என்று பதில் கொடுத்துள்ளனர்.
நடிகர் நாக சைதன்யா அவர்களுக்கும் நடிகை சோபிதாவுக்கும் இரண்டு தினங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்னும் நாக சைதன்யா அவர்கள் சமந்தா புகைப்படத்தை டெலிட் செய்யாமல் இருப்பது ஏன் என்று நெட்டிசன்கள் குழம்பி வருகின்றனர்.