CINEMA: நாக சைதன்யாவும் சமந்தாவும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்கள் திருமண பந்தம் நெடு நாட்களாக தொடரவில்லை. இருவரும் மனமுவந்து விவாகரத்து பெற்ற நிலையில் நாக சைதன்யா சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தா தனது கேரியரிலேயே முழு கவனத்தை செலுத்தினார். இதனிடையில் உடல் ரீதியாகவும் பாதிப்படைந்திருந்தார். ஆனால் இவர் இயக்குனர் ராஜ் நிதி மோரை ரகசியமாக காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.
இவர்கள் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே கலந்து கொண்டுள்ளனர். அது மட்டும் நன்றி சமந்தாவின் சூப்பர் டீலக்ஸ் படத்தை எடுத்து மேலும் இரண்டு படங்களில் ஒன்றாக வேலை செய்துள்ளனர். இதனால் இவர்கள் மீது பல கிசுகிசுக்கள் வைக்கப்பட்டது. அவ்வாறு பேசும் பட்சத்தில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்குமாறான புகைப்படங்களை சமந்தா இணையத்தில் வெளியிட்டார். இதனைப் பார்த்தவர்கள் இயக்குனர் மற்றும் நடிகை போல் இல்லாமல் அப்பாற்பட்ட உறவு இருப்பது போலவே புகைப்படம் மூலம் தெரிகிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்ய போகிறார்கள் என்று பேச்சு அடிப்பட தொடங்கியுள்ளது. தற்போது சமந்தாவின் தயாரிப்பு நிறுவனம் இவரின் சுபம் என்ற படத்தை எடுத்துள்ளது. இது ரீதியான போட்டோ க்ளிக்சும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர்கள் எங்கு சென்றாலும் சேர்ந்து செல்வதால் திரையுலகில் இப்படி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.