ஒரே படத்தில் அக்கா தங்கையாக நடிக்கவிருக்கும் டாப் ஹீரோயின்ஸ்!!  குஷியான ரசிகர்கள்!! 

Photo of author

By Parthipan K

கதாநாயகிகளை மையப்படுத்தி  உருவாகவுள்ள கதைக்கு, அக்கா தங்கையாக சமந்தாவும் ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா,விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் நயன்தாராவுடன் இணைந்து அவர் நடிக்க இருக்கிறார். அடுத்து அஸ்வின் சரவணன் இயக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். 

இதற்கிடையே பிரபல தெலுங்கு இயக்குனர் படத்திற்கும் நடிக்கவிருப்பதாகவும் அதில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சமந்தா  நடிப்பிற்கு அதிக ஸ்கோப் உள்ள கதை என்று கூறப்படுகிறது.

இதில் சமந்தாவுடன் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிக்க இருக்கிறார். இவர் தெலுங்கு சினிமாவில் தற்போதைய டாப் ஹீரோயினாக இருக்கிறார். 

தெலுங்கில் கீத கோவிந்தம் என்ற படத்தில் அறிமுகமான அவர், டியர் காம்ரேட், மகேஷ்பாபுவுடன் சரிலேரு நீக்கெவரு, நிதினுடன் பீஷ்மா படங்களில் நடித்தார். இப்போது அல்லு அர்ஜூன் ஜோடியாக, புஷ்பா படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதற்கிடையே சமந்தாவே, நடிப்பில் மிரட்டுவார். அவருடன் ராஷ்மிகா மந்தனாவும் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம் என்கிறார்கள் ரசிகர்கள். ரெண்டு டாப் ஹீரோயின் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.