திடீரென பெயர் மாற்றம் செய்த சமந்தா!! சர்ச்சையை கிளப்பும் ரசிகர்கள்!!
பொதுவாக பிரபலமாக இருப்பவர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அது பிரபலமாகி விடும். அது சொந்த வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி. அதுபோல தற்பொழுது தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா ஆக்கினேனி. இவர் இந்திய திரைப்பட நடிகையும் u உருமாதிரி கலைஞரும் ஆவார். இவர் தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு இணையருக்கு பிறந்தார்.
இவர் சென்னையில் வளர்ந்தார். 2007 ஆம் ஆண்டு இரவி வருமணுடைய மாஸ்கோவின் காவிரி என்ற திரைப்படத்தில் மூலம் முதல் முதலில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் தெலுங்கு திரைப்படமான ஏ மாயா சேசவா என்ற திரைப்படம் தான் முதலில் வெளியானது.
மேலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது இப் படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படத்திற்காக சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார். மேலும் இவர் அதன் பிறகு நடித்த பிருந்தாவனம், தூக்குடு, கத்தி போன்ற திரைப்படங்கள் வெற்றிப்படமாக அமைந்தது.
இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கு திரைப்படத் துறைகளில் பெயர் பெற அதிகம் சம்பளம் அங்கும் நடிகைகளுள் ஒருவராக உள்ளார். இவரது அழகும், துல்லியமான நடிப்பும் இவரை தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா முன்னணியில் வைத்திருக்கிறது.
இவர் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யா திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் சில காலங்களாக காதலித்து வந்தனர். பின்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் 2017 அக்டோபர் மாதம் நடைபெற்றது. நடிகை சமந்தா கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். நடிகர் நாக சைதன்யா இந்து மதத்தைச் சேர்ந்தவர். எனவே இரு மத முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து சமந்தா ருத் பிரபு என்னும் பெயர் படத்திற்குப் பிறகு சமந்தா அக்கினேனி என்று ஆனது. மேலும் இவர் சமூக வலைதளங்களிலும் அவரது இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் சமந்தா அக்கினேனி என்று தனது கணவரின் குடும்பப் பெயரை திருமணத்திற்கு பின்பு பதிவு செய்திருந்தார். ஆனால் தற்போது எந்த ஒரு காரணமும் இல்லாமல் அந்தப் பெயரை மாற்றி ஆங்கில எழுத்தில் S என்ற எழுத்தை மட்டும் பதிவு செய்து வைத்துள்ளார்.
இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. இதை பார்த்து இவரின் ரசிகர்கள் அவர்களுக்குள்ளேயே ஒரு சில கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கான காரணத்தை நடிகை சமந்தா அவர்களே சொன்னால்தான் தெரியவரும். அதுவரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.