வில் ஸ்மித்தை மாணவரியாக கிழித்த சமந்தா! இணையத்தில் வைரலாகும் ஸ்டோரி!

Photo of author

By Rupa

வில் ஸ்மித்தை மாணவரியாக கிழித்த சமந்தா! இணையத்தில் வைரலாகும் ஸ்டோரி!

நேற்று ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்கும் வகையில் ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. நேற்று 94 ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் விருந்து பெறுபவர்கள் பலர் கலந்து கொண்டனர். அந்த வகையில் கிங் ரிச்சர்ட் என்ற படத்தில் சிறப்பாக நடித்ததற்கு அவருக்கு விருது வழங்க இருந்தது. வகையில் வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவதற்காக அந்த விழாவில் கலந்து கொண்டார். அப்பொழுது அவரது மனைவி ஜடா பின்கேட் என்பவரும் வில் சிமித்துடன் கலந்து கொண்டார். அவரது மனைவி ஜடாவிற்கு அலோபீசிய என்ற தோல் நோய் உள்ளது. அதனால் அவர் மொட்டை அடித்து இருந்தார். இந்த நோயால் உச்சந்தலையில் சிறிய திட்டாக இருக்கும்.

இவ்வாறு இருக்கையிலும் தனது கணவர் விருது வாங்குவதை காண அந்த விழாவில் கலந்து கொண்டார். மேலும் அந்த விழாவை கிரிஸ் ராக் என்பவர் தொகுத்து வழங்கினார். இவர் நகைச்சுவையாக பேசும் வழக்கம் கொண்டவர். அவர் இருக்கையில் வில் ஸ்மித் மனைவியைப் உடல் தோற்றத்தை பற்றி மேடையில் மிகவும் கேளியாக பேசினார். பொறுக்க முடியாமல் பீல் ஸ்மித் மேடைக்கு சென்று அந்தத் தொகுப்பாளர் கிரிஷ் ராக்கை கன்னத்தில் அறைந்தார். உடனே அந்த இடம் முழுவதும் சலசலப்பு ஏற்பட்டது. அவர் அடைந்த வீடியோ மற்றும் புகைப்படம் உடனடியாக சமூக வலைத்தளங்களில் தீயாக பரவ ஆரம்பித்துவிட்டது. பலர் வில்ஸ்மித்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

மற்றொரு தரப்பினர் வில் ஸ்மித் இவ்வாறு அடுத்த இருக்கத் தேவையில்லை என்று கூறி வருகின்றனர். இவர் இருக்கையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் வில் ஸ்மித் அவர்கள் தனது மனைவியின் மருத்துவர் ரீதியான நோய் தொற்று குறித்து விழிப்புணர்வு கொடுத்திருக்கலாம். இல்லையென்றால் அவரை தனியாக அழைத்து சென்று இது பற்றி புரிய வைத்திருக்கலாம். அதை தவிர்த்து விட்டு இவ்வாறு வன்முறையில் இறங்கியது மிகவும் தவறு என அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் பல தமிழ் சினிமா பிரபலங்கள் வில் ஸ்மித்திற்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சமந்தா தற்போது நடித்து முடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் பாடத்தின் இயக்குனர், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வில் ஸ்மித் புகைப்படத்தை பதிவிட்டு மாஸ் என்று போட்டுள்ளார். இன்னும் பலர் வில் ஸ்மத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவரே இருக்கையில் சமந்தா மட்டும் வில் சிமித்திற்கு எதிராக கருத்தை கூறியுள்ளார்.