சமந்தாவை பற்றிய புதிய அறிவிப்பு! விவாகரத்துக்கு பிறகு வெளியான இந்த திட்டம்!

0
146
Samantharuthprabhu

நடிகை சமந்தாவும் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் பல வருடங்களாக காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்தனர்.

இருவருக்குள்ளும் கருத்துக்கள் ஒத்து போகாத நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதன் பிறகு சமந்தாவைப் பற்றி பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தனர். இதையெல்லாம் கண்டிக்கும் விதமாக சமந்தா ஒரு பதிவையும் போட்டிருந்தார்.

இந்நிலையில் சமந்தாவைப் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

“காத்து வாக்குல இரண்டு காதல்’, ‘சாகுந்தலம்’ திரைப்படங்களை தொடர்ந்து சமந்தா புதிய திரைப்படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ்’ நிறுவனத்தின் புதிய திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் சமந்தா.

‘ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ்’ ஏற்கனவே சகுனி, ஜோக்கர், காஷ்மோரா, கூட்டத்தில் ஒருவன், தீரன் அதிகாரம் ஒன்று’ அருவி, NGK, ராட்சசி, கைதி, சுல்தான் போன்ற திரைப்படங்களை தயாரித்துள்ளது.

 

https://www.instagram.com/p/CVCyElApnXM/

 

 

 

 

 

 

 

Previous articleதமிழக அரசின் உத்தரவு! நவம்பர் 1 முதல் இதுவும் செயல்படும்!
Next articleகாதலித்து வந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு நடந்த அவலம்! பின் தெரிய வந்த உண்மை!