கல்யாணத்தை பற்றி கேட்ட ரசிகர்! சமந்தாவின் அதிரடி பதில்!

தமிழ் திரையுலகிலேயே மிகவும் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து மிகவும் அழகாக நடித்த பார்ப்பவர் நடிகை சமந்தா. இப்பொழுது அவர் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியுள்ளார். நயன்தாராவை போலவே female லீட் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அது சம்பந்தமான சப்ஜெக்ட் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கல்யாணத்தை பற்றி கேட்ட ரசிகர்! சமந்தாவின் அதிரடி பதில்!
#image_title
கல்யாணத்தை பற்றி கேட்ட ரசிகர்! சமந்தாவின் அதிரடி பதில்!
#image_title

அவ்வப்பொழுது சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா இன்று ரசிகர்களிடம் கேள்வி கேட்டு பதில் அளித்துள்ளார்..

 

1. Sunday Thoughts here! என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கேள்வி கேட்க அதற்கு சமந்தாவும் பதில் அளித்துள்ளார்.

2. எப்படி லைஃப் இருக்கிறது? நாய்க்குட்டிகள் எப்படி இருக்கின்றன? என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்க. அதற்கு ஒரு போட்டோவை வெளியிட்டு நாம் அவர்களுக்கு உணவை தருகிறோம்! அவர்கள் மீது அன்பு காட்டுகிறோம்! ஆனால் அவர்கள் வேறொருவர் மீது அன்பு காட்டுகிறார்கள் என்று சொல்லி, அவரது அம்மா கதவிற்கு பின்னால் இருக்கிறார்கள் அதை மூன்று பேரும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என்பதை உணர்த்தும் ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார்.

3. வருகின்ற ஆண்டில் எதற்கு முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறீர்கள் என கேட்க, நல்ல உடல் பாதுகாப்பு குட் ஹெல்த் என்ற பதிலை தெரிவித்துள்ளார் .

4. கடவுளை நம்புகிறீர்களா என்று பதிலுக்கு ஆம் என்ற பதிலை அறிவித்துள்ளார்.

5. உங்களது மொபைல் போனில் லாக் ஸ்கிரீன் என்ன என்ற பதிலுக்கு அவர் ஒரு போட்டோவை பதிவு இட்டுள்ளார். அதில் ஒரு கடவுளின் படம் உள்ளது.

6. மறுபடியும் திருமணம் செய்வதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு ரசிகர் கேள்வி கேட்க ” புள்ளியலின்படி இது ஒரு மோசமான முதலீடாக கருதப்படுகிறது, என்று சொல்லி பதிவிட்டுள்ளார். மேலும் முதல் கல்யாணம் 50 சதவீதம் விவாகரத்தில் போய் முடியும் என்றும், இரண்டாவது கல்யாணம் 67 முதல் 73 சதவீதம் விவாகரத்தில் போய் முடியும் என்றும் போஸ்ட் போட்டுள்ளார்.