குறுவை தொகுப்பு திட்டம், மேட்டூர் அணை நீர்த் திறப்பு போன்ற விவசாயிகள் நலன் கருதி அரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டே வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய திட்டத்திற்காக கோரிக்கை விடுக்கப்பட்டது. அதாவது டெல்டா பகுதியில் விவசாயிகள் சம்பா உற்பத்தியை அதிகரிக்க சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், சம்பா சாகுபடி முடியும் வரை சம்பா பயிர்கள் உற்பத்திக்கும் விவசாயிகளுக்கும் தேவையான பயன்கள் கிடைக்கப்பெறலாம் என அரசிடம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இந்த சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தைப்பற்றி இயக்குனர் முருகேஷ் அவர்களாலும் வேளாண் துறை செயலர் அபூர்வா அவர்களாலும் தமிழ்நாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. கோரிக்கை விடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தினை தமிழ்நாடு அரசு விரைவில் அறிமுகப்படுத்தும் என்று கூறப்படுவதால் விவசாயப்பெருமக்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.
இந்தத் திட்டத்தினால் சம்பா சாகுடியின் உற்பத்தி நிலவரம் வெகு சிறப்பாக அமையும் என நம்பப்படுகிறது. விவசாயிகளால் ஒரே நேரத்தில் பதினைந்து லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் மேட்டூர் அணையில் மக்களின் கோரிக்கைக்கிணங்க நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் குறுவை தொகுப்பு திட்டத்திற்கு அடுத்து சம்பா தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டால் விரைவில் சம்பா சாகுபடி செய்யப்படும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
கூடிய விரைவில் தமிழக அரசால் அறிவிக்கப்படப்போகும் இந்தத் திட்டத்தின் மூலம் பூச்சுக்கொல்லி மருந்துகளும், தேவையான விதைநெல் மற்றும் உரங்களும் சம்பா சாகுபடி செய்யும் நேரத்தில் பெற முடியும். இதனால் சம்பா சாகுபடிக்கு இன்றியமையாத ஆதாரங்கள் தட்டுப்பாடின்றி விவயசாயிகளால் பெற இயலும்.
மேலும், சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தில் நீர் ஆதாரங்களான குளங்கள், ஏரி போன்ற பகுதிகளில் விவசாயதிற்குத் தேவையான நீரினை சேமித்து வைத்தல் என்பது அவசியமாக உள்ளது. 78.6 கோடி ரூபாய் செலவு ஒதுக்கீட்டில் சிறப்பாக நடைபெற்றுவரும் குறுவை தொகுப்பு திட்டத்தைப்போல இந்த சம்பா சிறப்பு தொகுப்பு திட்டமும் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.