திமுக-வின் அதே மாநாடு அதே ஸ்பாட்.. விஜய்யின் பலே திட்டம்!! ஆளும் கட்சியின் அடிமடியிலேயே கை வைக்கும் தவெக!!

Photo of author

By Rupa

திமுக-வின் அதே மாநாடு அதே ஸ்பாட்.. விஜய்யின் பலே திட்டம்!! ஆளும் கட்சியின் அடிமடியிலேயே கை வைக்கும் தவெக!!

நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். அந்த வகையில் கட்சி குறித்த தகவல்கள் வெளி வருவதற்கு முன்பாகவே கல்வி விருது வழங்கும் விழா ஒன்றை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இவரின் செயல்பாடுகள் அனைத்தும் கட்சி ஆரம்பிப்பது போலவே இருந்தது. அதன்படி கட்சியையும் தொடங்கினார்.

தற்பொழுது மக்களவை மற்றும் நடந்து முடிந்த இடைத்தேர்தல் என எதிலும் போட்டியிடவில்லை. இதற்கு மாறாக இவரது விருப்பம் ஏதாவது ஒரு கட்சிக்காவது கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக நாம் தமிழர் சீமானுடன் இவர்களின் கூட்டணி இருக்கும் என்று உறுதியாக கூறிய நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் எந்த ஒரு ஆதரவும் யாருக்கும் கொடுக்கவில்லை.

ஆனால் இதற்கு மாறாக தற்பொழுது நடந்து முடிந்த கல்வி விருது வழங்கும் விழாவில் மத்திய அரசு மற்றும் திமுகவை எதிர்ப்பது போலவே இவரது மேடைப்பேச்சு இருந்தது. இந்நிலையில் திமுக வெற்றியை எட்டுவதற்கான பயணம் என்ற நோக்கத்தில் திருச்சியில் மாநில மாநாட்டை ஆட்சிக்கு வருவதற்கு முன் நடத்தியது.

அதன் வழியே தற்பொழுது விஜய் அவர்களும் ஒரு மாநில மாநாடு, 10 மாவட்ட பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்த உள்ளார். திமுகவிற்கு திருச்சியில் நடத்திய மாநில மாநாட்டில் பெரும் வாரியான வரவேற்பு கிடைத்ததால் அதனை பிடிக்கவே விஜய் அதே இடத்தில் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு மக்களின் குறை நிறைகளை கேட்டு வாக்குகளை கவர உள்ளதாகவும் கூறுகின்றனர்.

குறிப்பாக திமுகவை எதிர்ப்பதே தமிழக வெற்றி கழகத்தின் தலையாய நோக்கம் என்றும் அதனால் அவர்கள் வழியே சென்று அவர்களை வீழ்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் மாநில மாநாடு நடத்தும் பொழுது கட்சி சின்னம் உள்ளிட்டவற்றை வெளியிட இருப்பதாகவும் கூறுகின்றனர்.