என்னதான் இந்தியாவில் பல ஸ்மார்ட்போன்கள் புதிதாக விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், ஆண்ட்ராய்டு என்றாலே பல மக்களுக்கு முதலில் ஞாபகம் வருவது “சாம்சங் மொபைல்” தான். ஏனென்றால், குறைந்த விலை முதல் அதிக விலை வரை அனைத்துப் பயனாளர்களுக்கும் பல முக்கிய அம்சங்களைத் தந்து கொண்டிருக்கின்றது.
அதுமட்டும் இல்லாமல் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் பல “சீக்ரெட் கோட்” காம்பினேஷங்கள் உள்ளன. இது சாம்சங் பயனாளர்களுக்குப் பல்வேறு வகையில் உதவியாக இருக்கிறது. தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் சீக்ரெட் கோட்களும், அவற்றின் பயன்களையும் பற்றி விரிவாகக் காண்போம்.
1)சீக்ரெட் கோட் *#9900#
உங்கள் போன் மிகவும் மெதுவாக வேலை செய்வதுபோல் இருந்தால், கீ பேடில் இந்த *#9900# எண்ணை டயல் செய்யலாம். இதன் மூலம் போனில் உள்ள தேவையற்ற ஜங்ஃ பைல்ஸ் டெலிட் செய்யப்பட்டு போன் வேகமாகச் செயல்படும்.
2)சீக்ரெட் கோட் #0#
உங்கள் போனில் உள்ள அனைத்து முக்கியமான அம்சங்களையும் பார்க்க இந்த #0# எண்ணை டயல் செய்யலாம். இதன் மூலம் போனில் உள்ள அனைத்து டெஸ்டிங் ஆப்ஷன்களும் உங்களுக்குக் காண்பிக்கப்படும்.
3)சீக்ரெட் கோட் *#2663#
இந்த சீக்ரெட் கோட் மூலம் நீங்கள் உங்கள் மொபைலில் வைஃபை ஸ்பீடையே அதிகரிக்கலாம். இது எந்த ஒரு ஸ்மார்ட்போனிலும் இல்லாத ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. இந்த *#2663# எண்ணை டயல் செய்தால் வைஃபை ரெஃப்ரெஷ் செய்யப்பட்டு நெட்வொர்க்கின் தரம் மேம்படுத்தப்படுகிறது.
4)சீக்ரெட் கோட் *#12580*369#
இந்த சீக்ரெட் கோடானது செகண்ட்ஹேண்டில் மொபைல் வாங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், இந்த *#12580*369# எண்ணை டயல் செய்யும்போது போனின் ஒரிஜினல் பயன்பாட்டுத் தேதி காண்பிக்கப்படும்.
5)சீக்ரெட் கோட் #31#
உங்கள் போனில் #31#xxx-xxx-xxxx என்று மொபைல் நம்பரை உள்ளிட்டு டயல் செய்தால், கால் செய்த நம்பருக்கு அவருடைய போனில் உங்கள் காலர் ஐடி மறைக்கப்பட்டு “Unknown number” என்று காண்பிக்கப்படும். ஆனால் இதைச் சரியான முறையில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.