ஊழியர் கையில் செருப்பு! சர்ச்சையில் சிக்கிய சுற்றுலாத்துறை மந்திரி!

Photo of author

By Amutha

ஊழியர் கையில் செருப்பு! சர்ச்சையில் சிக்கிய சுற்றுலாத்துறை மந்திரி!

Amutha

ஊழியர் கையில் செருப்பு! சர்ச்சையில் சிக்கிய சுற்றுலாத்துறை மந்திரி! 

மந்திரியின் செருப்பு ஊழியர் கையில் இருந்ததால் புதிய சர்ச்சையில் சுற்றுலாத்துறை மந்திரி சிக்கியுள்ளார். ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியாக உள்ள ரோஜா கடற்கரையில் இறங்கிய பொழுது அவரது செருப்பை ஊளிர் ஒருவரை சுமக்க வைத்ததால் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தமிழ் மற்றும் தெலுங்கில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர்தான் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி அரசியலில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். ஆந்திராவின் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரோஜா தற்போது சுற்றுலாத்துறை மந்திரியாக உள்ளார்.

மந்திரி ரோஜா ஆந்திர மாநிலம் பாபட்லா சூர்யலங்கா கடற்கரைக்கு சுற்றுலா மேம்பாடு சம்பந்தமாக ஆய்வு செய்ய சென்றார். அங்கே ரோஜா கடல் நீரில் இறங்கி மகிழ்ச்சியுடன் கடற்கரை ஓரமாக நடந்தார். கடற்கரையில் சிறிது நேரம் கழித்தார்கள்.

கடல் நீரில் இறங்கியபோது நடக்க முடியாது என்று ரோஜாவின் செருப்பை அவரது வேலைக்காரரின் கையில் கொடுத்து இருந்தார். தற்போது ரோஜாவின் இந்த செயல் சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது. இதுப்பற்றிய சில வீடியோக்கள், புகைப்படங்கள் வெளிவந்து வெளிவந்து வைரலாகி வருகிறது. மந்திரியாக இருந்தாலும் ஊழியர் செருப்பு சுமப்பதை ஏற்க முடியாது என்ற  கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

அடுத்ததாக சூர்யா லங்காவில் உள்ள சுற்றுலாத் தலத்துக்குச் சென்ற மந்திரி ரோஜா, சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அதில் அவர் பேசும்போது பாபட்லா சூர்யலங்கா கடற்கரை சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.சூர்யலங்கா கடற்கரையை மேலும் மேம்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதற்கான பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும். என அவர் கூறினார்.

விசாகப்பட்டினத்திற்கு அடுத்து சூர்யலங்கா மிக முக்கியமான கடற்கரை ஆகும்.சூர்யலங்கா கடற்கரைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை வருமாறு ரோஜா கேட்டுக் கொண்டார் மந்திரி ரோஜா.