தண்டவாளத்தில் சிக்கிய பாம்பை பத்திரமாக மீட்ட தூய்மை பணியாளர்கள்
சேலத்தில் இரயில்வே தண்டவாளத்தில் சிக்கிய கண்ணாடி விரியன் பாம்பை தூய்மை பணியாளர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.
சேலம் முள்ளுவாடிகேட் பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதர்களை தூய்மைப்படுத்தும் பணியில் ரயில்வே தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது புதரில் இருந்த சுமார் 2 அடி நீளம் கொண்ட கொடிய விஷம் உள்ள கண்ணாடி விரியன்பாம்பு ஒன்று தண்டவாளத்தில் உள்ளே புகுந்து வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது.
இதனையடுத்து அங்கிருந்த தூய்மை பணியாளர்கள் அந்த பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர். கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டதை வாகன ஓட்டிகள் சாலையில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது