கன்னட சினிமாவில் கால்பதிக்கும் சந்தானம்… பூசணிக்காய் உடைத்த படக்குழு! –புகைப்படங்கள்

0
253

நடிகர் சந்தானம் நடிக்கும் தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இதையடுத்து மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடித்துள்ளார். இந்தியா முழுவதும் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

குலு குலு படத்துக்குப் பிறகு சந்தானம் தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்து பூசணிக்காய் உடைக்கப்பட்டுள்ளது.

கன்னட சினிமாவில் கால்பதிக்கும் சந்தானம்… பூசணிக்காய் உடைத்த படக்குழு! –புகைப்படங்கள்

இது சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றன. சந்தானம் தமிழ் மொழி தாண்டி முதல் முறையாக கன்னட சினிமாவில் இந்த படத்தின் மூலம் கால்பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் உள்ளிட்ட விஷயங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஇந்த மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள்! முதல்வரின் அசத்தலான செயல்!
Next articleநிர்வாணத் தோற்றத்தில் விஜய் தேவரகொண்டா… இணையத்தில் வைரலாகும் லைகர் போஸ்டர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here