Breaking News

சந்தானம் நடிக்கும் புதிய படத்தைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்… வெளியான தகவல்!

சந்தனாம் நடிக்கும் புதிய படத்தைக் கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்… வெளியான தகவல்!

நகைச்சுவை நடிகரான சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இதையடுத்து மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடித்துள்ளார். இந்தியா முழுவதும் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் குலுகுலு படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஜூலை 29 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் விரைவில் பாடல்கள் மற்றும் டீசர் போன்றவை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களை இந்த ஆண்டு முழுவதும் ரெட் ஜெயண்ட் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக குலு குலு படத்தின் தொலைக்காட்சி உரிமம் சன் தொலைக்காட்சியால் கைப்பற்றப்பட்டது.

http://https://www.instagram.com/p/Cf6tsEGLuGy/?utm_source=ig_web_copy_link

Leave a Comment