வெளியானது கலக்கலான சந்தானத்தின் ‘குலுகுலு’ டீசர் !

Photo of author

By Vinoth

வெளியானது கலக்கலான சந்தானத்தின் ‘குலுகுலு’ டீசர் !

Vinoth

வெளியானது கலக்கலான சந்தானத்தின் ‘குலுகுலு’ டீசர் !

சந்தானம் நடிக்கும் குலுகுலு படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

சந்தானம் நகைச்சுவை பாத்திரங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகிறார். அவரின் அத்தகைய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள சபாபதி, டிக்கிலோனா உள்ளிட்ட சில படங்கள் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது.

இதையடுத்து மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் லாரி டிரைவராக நடித்துள்ளார். இந்தியா முழுவதும் பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் குலுகுலு படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஜூலை 29 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் இந்நிலையில் இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை நடிகர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து தற்போது படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரில் சந்தானம் தனது வழக்கமான குழுவினரோடு இணைந்து செய்யும் காமெடிக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.