தமிழ் & கன்னடத்தில் உருவாகும் சந்தானத்தின் படம்… தலைப்பு இதுதானா?

0
191

தமிழ் & கன்னடத்தில் உருவாகும் சந்தானத்தின் படம்… தலைப்பு இதுதானா?

நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படம் தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகிறது.

சமீபத்தில் சந்தானம் மேயாத மேன் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கும் ‘குலு குலு’ படத்தில் நடித்திருந்தார். எதிர்பார்த்த அளவுக்கு இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறவில்லை. சமீபகாலத்தில் வெளியாகி மோசமான தோல்வியை சந்தித்த படமாக குலுகுலு அமைந்தது. அதனால் உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சந்தானம்.

இந்த படத்துக்குப் பிறகு சந்தானம் தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து முடித்துள்ளார். சத்தமே இல்லாமல் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்து பூசணிக்காய் உடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்துக்கு இரு மொழி ரசிகர்களுக்கும் புரியும் படியான KICK என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திரைப்படத்தை சந்தானம் பெரியளவில் நம்பி வருகிறார்.

நகைச்சுவை நடிகராக வெற்றிகரமாக முன்னணி நடிகர்களின் படங்களில் வலம் வந்த சந்தானம் திடீரென ஹீரோவாக மாறினார். அப்படி நடித்த சில படங்கள் ஓடிய நிலையில் பல படங்கள் படுதோல்வி அடைந்தன. ஆனால் சமீபகாலமாக பெரிதாக எந்த படமும் பேசப்படவில்லை. இந்நிலையில்தான் KICK திரைப்படம் உருவாகி வருகிறது.

Previous articleசேலத்தில் கருப்பு பூஞ்சை? பீதியில் மக்கள்!
Next articleபொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி & விக்ரம்மை விட இவருக்குதான் சம்பளம் அதிகமாம்!