உதயநிதிக்கு தோள் கொடுக்க நடிகர் சந்தானம் அரசியலுக்கு வருகிறாரா?
ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா பெர்ரி நடிப்பில் வெளியான படம் ‘ஏ1’. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. ‘பாரிஸ் ஜெயராஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் மிகவும் பிரபலமடைந்தது.
இந்நிலையில் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது அதில் சந்தானம் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.பாரிஸ் ஜெயராஜ் படத்தை பற்றி நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த சந்தானம் அவர்கள் கானா பாடல் பாடும் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்பதை காமெடியாக சொல்லும் படம் தான் இந்த படம் என்றார்.
மேலும் நிருபர் ஒருவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திரைத்துறையில் வெற்றி பெற அவருக்கு பெரும் உதவியாக இருந்தவர் நீங்கள். தற்போது உதயநிதி அரசியலில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார். திரைத்துறையில் உதயநிதிக்கு பக்க பலமாக நின்று உதவிய நீங்கள் அரசியலிலும் அவருக்கு பக்கபலமாக நிற்பீர்களா? என்று கேட்ட கேள்விக்கு சந்தானம் அவர்கள் தற்போது நான் அரசியலில் ஈடுபடும் ஆசை எனக்கு இல்லை தற்போது நிறைய படம் பண்ணனும் அது தான் என்னுடைய விருப்பம் என்றார்.
மேலும் அரசியலுக்கு வருவதாக இருந்தால் எந்த கட்சியில் நீங்கள் இணைவீர்கள் என்று மீண்டும் கேட்ட பத்திரிகை நிருபர்களுக்கு எந்த கட்சி எனக்கு ராஜ்ய சபா சீட் தருகிறார்களோ அந்த கட்சியுடன் இணைந்து செயல்படலாம் என்று காமெடியாக பேசினார்.பாரிஸ் ஜெயராஜ் படத்தை தொடர்ந்து அடுத்து சபாபதி என்ற படத்தில் சந்தானம் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.