ஜெய்பீம் குறித்து சந்தானத்தின் கருத்து! வைரலாகும் வி ஸ்டாண்ட் வித் சந்தானம் ஹாஷ்டாக்!
சூர்யா ஜோதிகா தயாரிப்பில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் வெளியானது. இப்படம் இருளர் சமூகத்தின் மீதான காவல்துறை ஒடுக்குமுறையை காட்டியுள்ளனர். மேலும் உண்மை சம்பவத்தில் இதுகுறித்து நீதி பெற்று தந்த வழக்கறிஞர் சந்துரு எதிர்த்த பல இன்னல்களையும் இப்திரைப்படத்தில் தத்ரூபமாக காட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி இத்திரைப்படத்தில் வன்னியர் சமூகத்துக்கு எதிராக சில காட்சிகள் அமைத்து உள்ளனர். அதனால் பாமக உள்ளிட்ட சில கட்சிகள் ஜெய்பீம் படத்திற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாமக மாவட்ட செயலாளர் நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் என்ற ஒரு அறிவிப்பை அது தமிழக மக்களிடையே பெரும் பரபரப்பாக மேலும் அவ்வாறு கூறிய மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சில அரசியல் வாதிகளும் சூர்யாவிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல சினிமா துறையினர் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.அதனால் சூர்யா வசிக்கும் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சந்தானம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ஜெய் பீம் படத்தைப் பற்றி கேட்டனர். அப்போது அவர் கூறியது,மக்கள் அனைவரும் ஜாதி மத வேறுபாடின்றி சமநிலையோடு ஓர் இடத்தில் திரைப்படம் பார்த்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்கும் பொழுது எந்த ஒரு கருத்தையும் உயர்த்தி பேசலாம், அதை தவிர்த்து மற்றவரை தாழ்த்திப் பேசக் கூடாது என்று கூறினார்.அவ்வாறு பேசுவது தேவையற்றது என்று தெரிவித்தார்.ஒரு படத்தில் காட்ட வேண்டிய மையத்தை உயர்த்தி பேசலாம். மையத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக மற்றதை தாழ்த்தி பேசக்கூடாது இவ்வாறு கூறினார். வருங்கால இளைஞர்கள் மற்றும் சமூகத்தினற்கும் நாம் நல்ல சினிமாவை தரவேண்டும் என பேசினார். சந்தானம் இவ்வாறு கூறியதற்கு பலர் வழி மொழிந்து டுவிட்டரில் வி ஸ்டான் வித் சந்தானம் என்ற ஹாஷ்டாக் பிரபலமடைந்து வருகின்றது.