சிறுநீரக பிரச்சனையா கவலையை விடுங்க..!! சிறுநீரக கல்லை கரைக்க இந்த ஒரு கீரை போதும்..!!

0
622
Saranai Keerai

Saranai Keerai: சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான பிரச்சனையும் போக்க கூடிய கீரை தான் இந்த சாரணைக் கீரை. இந்த கீரையை அனைவரும் ஆடு, மாடுக்கு தான் பறித்து கொண்டு வந்து போடுவார்கள். இதை சாப்பிடலாமா என்று பலருக்கும் சந்தேகம் வரும். இந்த கீரையை கூட்டு செய்தோ, குழம்பு வைத்தோ தாராளமாக சமைத்து சாப்பிடலாம். இந்த சாரணைக்க கீரையை பலரும் பல விதமான பெயர்களில் அழைப்பார்கள். ஒரு சிலர் இதனை மூக்கிரட்டை கீரை (mookirattai keerai) என்றும், மூக்கரட்டை சாரை என்றும் கூறுவார்கள். ஆனால் இது மூக்கிரட்டை வகையை சார்ந்தது. ஆனால் மூக்கிரட்டை கீரை இல்லை. இந்த சாரணைக் கீரையின் பயன்களை தற்போது காணலாம்.

சாரணை கீரையின் பயன்கள்

பொதுவாக இந்த கீரையை யாரும் விதைப்பது இல்லை. மற்ற கீரைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட இந்த வகை கீரைகளுக்கு கொடுப்பது இல்லை. இந்த கீரை மற்ற செடிகளுக்கு இடையில் வளரும். இதனை களைச்செடிகள் என்று பிடிக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் இந்த கீரையில் அதிக அளவு தாது உப்புகள், இரும்பு சத்து, பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் உள்ளன.

இந்த கீரை சரும பராமரிப்பு ஏற்ற கீரையாக உள்ளது. இந்த சாரணை கீரை முகப்பருக்கள் வராமல் தடுக்கின்றன. இந்த இலைகளை பறித்து வந்து நிழலில் உலர்த்தி பொடி செய்து சிறிது கஸ்தூரி மஞ்சள், பால் சேர்த்து கலந்து முகத்தில் பூசி வர முகம் பாெலிவு காெடுக்கும்.

இந்த இலைகளை பறித்து நீரில் போட்டு கொதிக்க வைத்து, இஞ்சி துண்டு சிறிதளவு சேர்த்து வடிகட்டி ஆறவைத்து வெறும் வயிற்றில் குடித்து வர மலச்சிக்கல், மூட்டுவலி, முக்கியமாக சிறுநீரக பிரச்சனையை சரிசெய்கிறது.

இந்த கீரையை கூட்டு செய்து சமைத்து வர கல்லீரலை சுத்தம் செய்கிறது. ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்து இந்த சாரணை கீரை.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இந்த கீரையை பார்த்தால் ட்டாயம் பறித்து வந்து கூட்டு செய்து சாப்பிடுங்கள்.

மேலும் படிக்க: இந்த இலையை மட்டும் சாப்பிடுங்க போதும்… மூலம் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்..!

Previous articleஞாபகச் சக்தியை அதிகரித்துக் கொள்ள வல்லாரையை இப்படி சாப்பிடுங்க! 
Next articleநெஞ்சு எரிச்சல் புளித்த ஏப்பம் சாப்பிட்டது நெஞ்சிலேயே நிற்கிறதா? இதை குடிங்க இனி Acidity வராது..!