ஹாலிவுட் நடிகரயே மிஞ்சும் அளவிற்கு உடலை ஏற்றிய சரத்குமார்! வைரலாகும்  போட்டோ!

Photo of author

By Parthipan K

ஹாலிவுட் நடிகரயே மிஞ்சும் அளவிற்கு உடலை ஏற்றிய சரத்குமார்! வைரலாகும்  போட்டோ!

Parthipan K

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் தான் சரத்குமார். சினிமா துறையில் அடியாளாக தனது வாழ்க்கையை தொடங்கிய சரத்குமார் படிப்படியாக முன்னேறி ஒருகட்டத்தில் பிரபலமான ஹீரோவானார்.

மேலும் சரத்குமாருக்கு தற்போது 66 வயது என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்.

ஏனெனில் அந்த அளவுக்கு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம் தினமும் காலையில் தவறாமல் உடற்பயிற்சி செய்வது தானாம்.

மேலும் சரத்குமார் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது தெலுங்கில் பல ஹீரோக்களுக்கு தந்தை கதாபாத்திரத்தில் கலக்கி கொண்டிருக்கிறாராம் சரத்குமார்.

இந்நிலையில் சரத்குமார் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைத்து தரப்பினரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.

ஏனெனில் சரத்குமார் அந்தப் புகைப்படத்தில் 66 வயதிலும், ஹாலிவுட் பட நடிகர்களின் ரேஞ்சுக்கு தன்னுடைய உடல் அமைப்பை மாற்றி கெத்தாக  இருக்கிறார்.

மேலும் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.