சரத்குமார் தான் அடுத்த பாஜக மாநில தலைவர்.. டெல்லி மேலிடம் எடுக்கும் அதிரடி முடிவு!!

0
11
Sarathkumar is the next BJP state president.. Action decision to win Delhi!!
Sarathkumar is the next BJP state president.. Action decision to win Delhi!!

BJP: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக அண்ணாமலை பேசியதால் அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியது. எடப்பாடி பழனிச்சாமியும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்ற தீர்க்கமான முடிவிலிருந்தார். ஆனால் தனித்து நின்று போட்டியிட்டால் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என தேர்தல் வியூகர்கள் எடப்பாடியிடம் கூறியுள்ளனர். இதனையெல்லாம் ஆலோசனை செய்த எடப்பாடி பாஜக மேலிடத்திற்கு பல விதிமுறைகளை போட்டார்.

அதில் முதலாவதாக அண்ணாமலையை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேற்கொண்டு சசிகலா, தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை எனது கட்சியில் இணைக்க கூறி கட்டாயப்படுத்த கூடாது எனக் கேட்டுக்கொண்டார். அதேசமயம் பாஜகவும் நீங்கள் ஒதுக்கியவர்களி எங்கள் கூட்டணியில் வைத்துக் கொள்வோம் அதனை தடுக்கக்கூடாது என்றும் கூறியுள்ளனர். இதற்கெல்லாம் சம்மதம் தெரிவித்து எடப்பாடி, சென்னை வரவே அடுத்தடுத்து அரசியல் கலமானது சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இவரை அடுத்து அண்ணாமலை அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றார். டெல்லி சென்று வந்ததும் இவர்பதவி விலகுவது குறித்து பேச்சு அரசல் புரசலாக பரவ தொடங்கியது. அதன்படி நேற்று கூட கோயம்புத்தூர் ஏர்போர்ட்டில் அளித்த பேட்டியில், தமிழக பாஜக மாநில தலைவருக்கான போட்டி நடைபெறும், அதில் என் பெயர் இல்லை என்று தெள்ள தெளிவாகவே கூறிவிட்டார். இந்த போட்டி லிஸ்டில் கிட்டத்தட்ட ஆறு பேர் உள்ளார்கள் எனக் கூறுகின்றனர்.

முதலாவதாக சரத்குமார் இரண்டாவதாக, நயினார் நாகேந்திரன், வாணி சீனிவாசன் தமிழிசை சௌந்தர்ராஜன், ஏ பி முருகானந்தம், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளார்களாம். இதில் சரத்குமாரை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர். தமிழகத்திற்கு மிகவும் பரிச்சயமான முகம். மேற்கொண்டு தனது அரசியல் பயணத்தை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்துள்ளதால் இவருக்கு முக்கிய அந்தஸ்து கொடுக்க டெல்லி மேலிடம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Previous articleதமிழகம் வரும் அமித் ஷா… சூடு பிடிக்கும் 2026 தேர்தல் களம்! அதிமுக-பாஜக கூட்டணியில் அடுத்த கட்ட நடவடிக்கை?
Next articleவிஜய் + விஜயகாந்த்: உருவாகும் புதிய அரசியல் செண்டிமெண்ட்! தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?