வாவ் !! சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சியா இது?… எங் லுக்கில் மெர்சலான போட்டோஸ்..!

Photo of author

By CineDesk

வாவ் !! சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சியா இது?… எங் லுக்கில் மெர்சலான போட்டோஸ்..!

CineDesk

Updated on:

Saravana Arul

ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட டாப் ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு விளம்பர படங்களில் நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனவர் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான சரவணா அருள். சோசியல் மீடியாவில் கேலி, கிண்டல் என விமர்சனங்கள் எழுந்தாலும் தாத்தா முதல் குட்டி பாப்பா வரை இவருடைய விளம்பரங்களை ரசிக்க ஆரம்பித்தனர்.

 

அதனால் கோலிவுட்டில் நாயகனாக களமிறங்கி ஏன் ஒரு கலக்கு கலக்க கூடாது என திட்டமிட்டார். உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர் ஜேடி-ஜெர்ரி படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக புரொடக்‌ஷன் நம்பர் 1 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு ஏவிஎம் ஸ்டூடியோவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில் சரவணனுக்கு ஜோடியாக, மாடல் நாயகி கீத்திகா திவாரி நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

Saravana Arul

 

கோலிவுட்டையே மிரட்டும் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த 1ம் தேதி மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில், ஆக்‌ஷன் காட்சிகளில் எதிரிகளை Air-யில் பறக்கவிடும் சண்டை காட்சி போட்டோஸ் வெளியாகி தாறுமாறு வைரலானது.

Saravana Arul

தற்போது பளிங்குச் சிலை போல் பளபளவென இருக்கும் ஹீரோயினுடன், அஜித், விஜய்க்கே டப் கொடுக்கும் அளவிற்கு எங் லுக்கில் இருக்கும் அருள் அண்ணாச்சியின் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.