Cine Stories: எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி இருவரும் இணைந்து பல படங்களை கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக நாடோடி மன்னன் படத்தில் பானுமதியுடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவர் படத்தை விட்டு வெளியேறினார். அவரை படத்தில் இறந்து விட்டதாக காட்டிவிட்டு இடைவெளிக்குப் பிறகு சரோஜாதேவி வருவது போல் காண்பித்து படத்தை முடித்தனர். அதேபோல தான் நிஜ வாழ்க்கையிலும் நடந்துள்ளது. எம்ஜிஆர் மற்றும் எம் ஆர் ராதா இருவருக்குமிடையேயான சந்திப்பில் துப்பாக்கி சூடு ஏற்பட்டு எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே சரோஜாதேவி மற்றும் எம்ஜிஆர் காம்போ குறித்து பல படங்கள் ஹிட்டானதால், மேற்கொண்டு பல படங்கள் இருவரும் இணைந்து நடிக்க ஒப்பந்தம் போட்டிருந்தனர். எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்த போது சின்னப்ப தேவர் அவரை நேரில் சந்தித்து நீங்கள் நல்ல உடலை தேற்றி வாருங்கள் மீண்டும் நடிப்பீர்கள் என்று கூறிவிட்டு வந்துள்ளார். இவர் மீண்டும் வருவாரா வரமாட்டாரா என்ற கணிப்பில் சரோஜாதேவி, நான் எம்ஜிஆர் படங்களில் நடிப்பதை காட்டிலும் சிவாஜி படங்களில் நடிப்பதுதான் பிடித்துள்ளது.
அதில் தான் எனது திறமை தெரிகிறது என கூறிவிட்டார். எம்ஜிஆர் உடன் நடித்த நீதிக்கு பின் பாசம் படத்தில் கூட பாதியிலேயே வெளியேறினார். இதனால் அந்த படத்தில் சரோஜா தேவி இறந்தது போல் காட்டிவிட்டு, எம்ஜிஆரின் அத்தை மகளாக ஜெயலலிதா இரண்டாவது ஹீரோயினியாக எண்ட்ரீ கொடுத்திருப்பார். மீண்டும் இந்த படத்தில் நடிப்பதற்காக சரோஜாதேவி இடம் இயக்குனர் சென்றபோது கூட , உங்களுக்கு வேண்டுமென்றால் வேறு எந்த ஒரு நடிகையை நடிக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று திமிராக பேசியுள்ளார். இதுவே ஜெயலலிதா இந்த படத்திற்குள் நுழைய முக்கிய காரணம் எனக் கூறுகின்றனர்.