சம்பளம் தராமல் ஏமாற்றப்பட்ட சரோஜாதேவி!! தாயார் செய்த தரமான சம்பவம்!!

0
9
sarojadevi-cheated-by-not-paying-salary-a-quality-incident-done-by-the-mother
sarojadevi-cheated-by-not-paying-salary-a-quality-incident-done-by-the-mother

நடிகை சரோஜா தேவி அவர்கள் தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகர்களுடன் நடித்து மிக சிறந்த நடிகையாக மட்டுமல்லாது முப்பெரும் தேவிகள் என அழைக்கப்படும் பத்மினி சாவித்திரி உடன் சரோஜா தேவி என்ற பெருமையையும் 60, 70 காலகட்டங்களில் தன்னகத்தை வைத்திருந்தவர்.

1956 ஆம் ஆண்டு தமிழில் கோகிலவாணி என்ற திரைப்படம் தயாரிப்பாளர் எஸ் ஏ நடராஜன் தயாரிப்பில் வெளியானதாகும். இந்த திரைப்படம் முதலில் கன்னடத்தில் இதய தயாரிப்பாளரால் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் குறித்தும் இந்த திரைப்படத்தில் சரோஜாதேவி அவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றப்பட்டது குறித்தும் கலைஞானம் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது :-

கோகிலவாணி திரைப்படத்தின் இயக்கம் மற்றும் தயாரிப்பு இரண்டையும் எஸ் ஏ நடராஜன் அவர்கள் மேற்கொண்டதாகவும் இத்திரைப்படம் முதலில் கன்னடத்தில் வெளியாகி அதன்பின் தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்த திரைப்படத்தில் சரோஜாதேவி அவர்கள் நடிப்பதற்கு 1000 ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் அட்வான்ஸ் தொகையாக 101 கொடுக்கப்பட்டதாகவும், அதன் பின் இத்திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்ட பின் சென்னையில் இருக்கக்கூடிய உட்லண்ட்ஸ் ஹோட்டலில் எஸ் ஏ நடராஜன் அவர்கள் தங்கி இருந்ததாகவும் அங்கு தன்னுடைய சம்பளத்தை பெறுவதற்காக சரோஜாதேவி அவர்களும் அவருடைய தாயாரும் சென்று இருக்கின்றனர்.

அப்பொழுது சம்பளத்தை குறித்து பேச்சு எழுந்த பொழுது தயாரிப்பாளர் மற்றும் சரோஜாதேவி அவர்களுடைய தாயார் இருவருக்கும் இடையில் மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு அது மிகப்பெரிய தகராறாக முற்றி சரோஜா தேவி அவர்களுடைய தாயார் தயாரிப்பாளரை நோக்கி மண்ணை வாரி இறைத்து நீ நன்றாக இருக்க மாட்டாய் என சபித்து வந்ததாக கலைஞானம் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

Previous articleஇவனை மாடோடு மாடாக நிற்கச் சொல்.. நாசரைப் பார்த்து கடுப்பான இயக்குனர்!!
Next article“பரந்தூர் ஏர்போர்ட்” விஜய்-யின் மாஸ் நடவடிக்கை.. அவசர அவசராம தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!