அவர்கள் பாட்சா எங்களிடம் பலிக்காது! சசிகலாவின் வழக்கறிஞர் அதிரடி!

Photo of author

By Sakthi

சசிகலா தன்னுடைய காரில் அதிமுக கொடி பறக்க விட்டு அதற்கு எதிராக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி தலைமையில் அமைச்சர் ஜெயக்குமார் சி.வி சண்முகம் போன்றோர் தமிழக டிஜிபியை நேரில் சந்தித்து புகார் வழங்கி இருக்கிறார்கள்.

புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த கே.பி முனுசாமி அவர்கள் தெரிவித்ததாவது, சசிகலா அதிமுக என்ற கட்சியின் உறுப்பினர் கிடையாது. அப்படி இருக்க அவரை எதற்காக நீக்கம் செய்யவில்லை என்று கேள்வி எழுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்ததாவது, சசிகலா இனி ஐநா சபைக்கு மட்டுமே போகவேண்டும் என்று தெரிவித்தார். இந்த நிலையில், சசிகலாவின் வழக்கறிஞராக இருந்து வரும் ராஜா செந்தூர்பாண்டியன் இந்த நிகழ்வுகள் தொடர்பாக தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அமைச்சர்கள் பொதுமக்களுக்கான நலப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய சமயத்தில், அதை சரிவர செய்யாமல் சசிகலாவின் காரில் கொடி இருக்கிறது என்று தெரிவித்துக்கொண்டு ஆட்சி அதிகாரம் இருக்கின்ற தைரியத்தில் டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறார்கள்.

கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மதுசூதனன் தலைமையில் இருக்கும் குழுவுக்கு ஒதுக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் இன்னொரு குழு இருக்கிறது என்றுதானே அர்த்தமாகிறது. இது சட்டத்துறை அமைச்சர் திரு சி .வி சண்முகம் அவர்களுக்கு தெரியாதா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சென்ற 2017 ஆம் ஆண்டு அதிமுகவின் பொது குழுவை எதிர்த்து திருமதி சசிகலா தொடர்ந்த வழக்கு தற்போது வரையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், அதனை மறைத்துவிட்டு காவல்துறை ஆணையாளரை தற்சமயம் சந்தித்திருக்கிறார்கள். சசிகலா அதிமுகவின் கோடியை பயன்படுத்துவதை சட்டப்படி யாரும் தடுத்து விட இயலாது சசிகலாதான் பொதுச்செயலாளர் அவர் பொதுச் செயலாளர் இல்லை என்பதை எந்த நீதிமன்றமும் இதுவரையில் கூறவில்லை.

என்னுடைய அனுபவத்தில் நான் கூறுகிறேன் சசிகலா மிகவும் தைரியமிக்க ஒரு பெண்மணி, அவருக்கு எதிராக இன்றைய தினம் அவருடைய எதிரிகள் செய்துவரும் செயல்கள் எல்லாம் இவர்களுக்கு எதிராகவே வந்து நிற்கும் என்று சொல்கிறார்.