சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்த அந்த முக்கிய தகவலால்! பீதியில் ஆளும் தரப்பு!

Photo of author

By Sakthi

சசிகலா அவர்கள் சிறையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடுதலை ஆகலாம் என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்திருக்கின்றார். அதேநேரம் சசிகலா விடுதலை ஆவதற்கு அவருக்கு அபராத தொகையாக விதிக்கப்பட்ட 10.10 கோடி ரூபாய் அபராதத் தொகையை கட்ட தவறினால், தண்டனை காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சசிகலா தரப்பில் ரூபாய் 10.10 கோடியை கடந்த 18ஆம் தேதி நீதிமன்றத்தில் செலுத்தி ஆகிவிட்டது.

இந்த நிலையில்,பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு சசிகலா அவருடைய வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என்று முன்னரே சிறைத்துறை தெரிவித்திருந்தது. அதுபடி பார்த்தோமானால், சசிகலா இன்னும் 68 நாட்கள் மட்டுமே சிறையில் இருப்பார். கர்நாடக சிறைத்துறையில் விதிமுறைகள் படி அவருடைய நன்னடத்தை காரணமாக மாதத்திற்கு மூன்று நாட்கள் தண்டனை குறைப்பு என்ற அடிப்படையில் 129 நாட்கள் தண்டனை குறைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக சசிகலா எப்போது வேண்டுமானாலும் விடுதலை ஆகலாம் என்று தெரிவித்திருக்கின்றார்.